Tamil Bayan
Monday, June 13, 2016
Saturday, September 26, 2015
வரலாற்றில் ஓர் ஏடு - 7
பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஏழை சஹாபி ஒருவர் தன்னிடமுள்ள சிறிய தங்கக்கட்டி ஒன்றைக் கொடுத்து இதை தர்மமாக கொடுத்து விட நாடுகிறேன் .இதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை என்றார் .இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தனது திருவதனத்தை அவர் பக்கமிருந்து திருப்பிக் கொண்டார்கள் .அம்மனிதரும் திரும்பத் திரும்ப தாம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ,சிலர் தங்களிடம் இருப்பதெல்லாம் தருமம் கொடுத்து விட்டு பின்னர் மனிதர்களிடம் யாசகம் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர் .இது தவறாகும் எனக் கூறினார்கள் .
நீதி : இருப்பதைக் கொடுத்து விட்டு யாசகம் கேட்கக் கூடாது .
Tamil bayan - Manners of Believing Women
Subject - Manner of Believing Women
Venue : Kimbula ela jummah masjid
Ulema : Ash sheikh Ashik (rashidi)
Friday, September 25, 2015
வரலாற்றில் ஓர் ஏடு - 6
பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து '' நாயகமே ! நான் யாருடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் ?'' என்று வினவினார்கள் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் '' உமது அன்னையிடம் '' என்று சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று வினவினார்கள் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ''உமது " அன்னையிடம் '' என்று சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று வினவினார்கள் .அப்போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் ''உமது '' அன்னையிடம் '' என்ற பதிலையே திருப்பிச் சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நான்கவது முறையாக கேட்ட போது ''உமது தந்தையிடம் '' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் .
நீதி : தாய் தந்தையருக்கு மரியாதை செய் .
Source : Google Image , own idea , E-books
வரலாற்றில் ஓர் ஏடு - 5
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தமது தோழர்களிடம் தொழுகையை பற்றி கூறிக் கொண்டிருக்கும் போது யார் தொழுகையை பேணி நடக்கின்றாரோ அவருக்கு ஒரு பிரகாசமும் , இறைவனிடம் ஓர் ஆதாரமும் ,மறுமை நாளில் வெற்றியும் கிடைக்கும் .யார் தொழுகையை பேணி நடக்கவில்லையோ அவருக்கு பிரகாசமும் கிடைக்காது .இறைவனின் ஆதாரமும் கிடைக்காது ,மறுமை நாளில் வெற்றியும் கிடைக்காது .அவனை மறுமை நாளில் இறைவனின் எதிரிகளான ''பிர்ஹவ்ன் , காருண் ,ஹாமான் '' போன்ற பெரும் பாவிகளுடன் சேர்த்து எழுப்பப்படும் என்று சொன்னார்கள் .
நீதி : தொழுகையை பேணித் தொழ வேண்டும் .
Source : Google Image , Own idea , e-books
வரலாற்றில் ஓர் ஏடு - 4
பெருமானார் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் ''உங்களில் ஒருவர் வீட்டின் எதிரே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது .அதில் அவர் ஒரு நாளைக்கு 5 தடவை குளிப்பாராயின் அவர் உடலில் அழுக்கு இருக்குமா ? என்று கேட்டார்கள் . அதற்கு நாயகத் தோழர்கள் ''கொஞ்சமும் உடம்பில் அழுக்கு இருக்காது ''என்று பதிலளித்தார்கள் .''இவ்வாறுதான் ஐங்காலத் தொழுகைகளும் .ஒருவர் ஒரு நாளைக்கு 5 நேரம் தொழுதல் அவற்றின் முலம் இறைவன் அவரிடம் உள்ள பாவங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறான் '' என்று சொன்னார்கள் .
நீதி : 5 நேரம் தொழுவதால் எல்லா பாவங்களும் அழிந்து விடுகின்றன .
Source : Google image , Own Idea , e-books
Tuesday, September 22, 2015
வரலாற்றில் ஓர் ஏடு-3
பெருமானார் (ஸல்) அவர்களிடம் '' நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது எது ? என்று கேட்கப்பட்டது '' தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது '' என்று கூறினார்கள் .''பின்பு எது ?'' என்று கேட்கப்பட்டது '' பெற்றோரைப் பேணி நடப்பது '' என்று கூறினார்கள் . அதற்கு பின் எது ? என்று கேட்கப்பட்டது . '' அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது'' என்று கூறினார்கள்
நீதி : தொழுகையை அதற்குரிய நேரங்களில் தொழுதல் வேண்டும் .
Source : Google Image , E-book , My Idea
Subscribe to:
Posts (Atom)