பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து '' நாயகமே ! நான் யாருடன் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் ?'' என்று வினவினார்கள் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் '' உமது அன்னையிடம் '' என்று சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று வினவினார்கள் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ''உமது " அன்னையிடம் '' என்று சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று வினவினார்கள் .அப்போதும் பெருமானார் (ஸல்) அவர்கள் ''உமது '' அன்னையிடம் '' என்ற பதிலையே திருப்பிச் சொன்னார்கள் .பிறகு யாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நான்கவது முறையாக கேட்ட போது ''உமது தந்தையிடம் '' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் .
நீதி : தாய் தந்தையருக்கு மரியாதை செய் .
Source : Google Image , own idea , E-books
No comments:
Post a Comment