பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஏழை சஹாபி ஒருவர் தன்னிடமுள்ள சிறிய தங்கக்கட்டி ஒன்றைக் கொடுத்து இதை தர்மமாக கொடுத்து விட நாடுகிறேன் .இதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை என்றார் .இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்கள் தனது திருவதனத்தை அவர் பக்கமிருந்து திருப்பிக் கொண்டார்கள் .அம்மனிதரும் திரும்பத் திரும்ப தாம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார் .அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ,சிலர் தங்களிடம் இருப்பதெல்லாம் தருமம் கொடுத்து விட்டு பின்னர் மனிதர்களிடம் யாசகம் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர் .இது தவறாகும் எனக் கூறினார்கள் .
நீதி : இருப்பதைக் கொடுத்து விட்டு யாசகம் கேட்கக் கூடாது .